Monday, 30 January 2017

Save Bhavani River

கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ---

பவானி ஆற்றில் மின் உற்பத்திக்காக நிறுவப்பட்டுள்ள இரண்டு கதவணைகளால் ஒட்டு மொத்த பவானி நீரும்
சாக்கடைக்கழிவுகள் ,
தொழிற்சாலைக்கழிவுகள்,
அரசு மருத்துவமனை பிணவறைக் கழிவுகள் நேரடியாகக் கலந்து
கழிவு நீர் குட்டையாக காட்சியளிக்கிறது.
இந்த கழிவு நீர் தான் சுத்திகரிக்கப்பட்டு குடிநீருக்காக வழங்கப்படுகிறது.

நகராட்சியால் விநியோகிக்கப்படும் பவானி ஆற்றின் நீர் குடிக்க தகுதியற்றது என நீர் பரிசோதனை ஆய்வக அறிக்கைகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.

இந்த கழிவு நீர் கலந்த குடிநீரால் பொதுமக்கள் எண்ணற்ற நோய்களுக்கு ஆளாகின்றனர்.

*ஆகவே இந்த கதவணைகளை நிரந்தரமாக திறந்து விட வேண்டும்.*

விவசாயம் முற்றிலும் அழிந்து போனது.

*கேரள அரசு பவானியின் குறுக்கே முக்காலி பகுதியில் தடுப்பணை கட்டி வருகிறது. இதனை தமிழக அரசும் மத்திய அரசும் தடுத்து நிறுத்த வேண்டும். கோவை மாவட்டம், ஈரோடு மாவட்டம், திருப்பூர் மாவட்டத்திற்கு உயிர் நீர் பவானி நீர்*

*பில்லூர் அணையை உடனடியாக தூர் வார வேண்டும். சகதிகளால் 55 அடி மண்டிக் கிடக்கும் பில்லூர் அணையில் 22 அடி மட்டுமே நீர் தேக்க முடிகிறது.*

*மேட்டுப்பாளையம் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கு சுத்தமான பவானி நீர் விளாமரத்தூர் பகுதியில் இருந்து உடனடியாக கொண்டு வர வேண்டும். தொழிற்சாலை கழிவுகள், சாக்கடை கழிவுகள் கலந்த குடிநீர் வேண்டாம்*

பவானி நதியை அழிவிலிருந்து காக்க உதவுங்கள்..

பவானி நதி நீர் விஷமாகிப் போனது..

நண்பர்களே!
பொதுமக்களே!
         

""" நதி யாரோ
           ஒருவருக்கானதல்ல !
     எல்லோருக்குமான
              பிரம்மாண்ட கடவுள்!
முதலில்
       கடவுளைக் காப்பாற்றுங்கள் !
பின்னர் கடவுள்
உங்களைக் காப்பாற்றுவார் !

No comments:

Post a Comment