Saturday, 11 February 2017

Youth Role in INDIA'S Development


ROLE OF YOUTH

THE YOUTH of today is the driving force of tomorrow. It has some responsibility towards its country, which it must acknowledge and practice. Instead of blaming the system, youth should come together and mould the nation for a better tomorrow.

Youth have some responsibility towards their country. We need to learn from yesterday and live with hope for a better tomorrow. We can learn from our past how the young warriors shed their blood for the country.
We all have some responsibility towards our country, which we must understand and practice. Youth and nation have to walk hand in hand. Most importantly, the youth should be honest and hard working.

Youth should stand against all the wrong doings in the country. Instead of blaming the system, young India should come together and with their toil should mould our nation for a better tomorrow. We, the youth should use our brains, strength, creativity and imagination to serve our nation. Instead of asking, "Who’s going to fight the corruption?" we should do it ourselves. Rather than fighting upon the issues and ruining the country, we should learn to develop it.
 So we have to do our bit for the nation and be the change that we have always wanted.
The role of youth is of most importance in today’s time. It has underplayed itself in field of politics. It should become aspiring entrepreneur rather than mere workers. It can play a vital role in elimination of terrorism. Young participation is important because youth are the country’s power. Youth recognise problems and can solve them. Youth are strong forces in social movements. They educate children about their rights. They help other young people attain a higher level of Intellectual ability and to become qualified adults.
‘Youth is like a fire
It crept forward.
A Spark at first
Growing into a flame
The brightening into a Blaze’

“IT’S OUR TIME TO CHANGE EVERYTHING
WE MUST DEVELOP OUR INDIA

GET UP YOUNGSTERS

Friday, 3 February 2017

Dangerous Broiler chicken-பிராய்லர் கோழி


மதுவை விட பாதிப்பு❓
                    🐓 பிராய்லர்  கோழி🐓
40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி🐓 வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.
பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

🐓ஆண்களின்  உயிரணுக்களை அழிக்கிறது.😯
ஆண்மையை அழிக்கும் பிராய்லர்

🐓குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.😯

🐓"பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்".😯

🐓டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள்.😯

"இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது".😴😴

🐓பிராய்லர் கோழி சதையு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.😟

🐓கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.😇

🐓100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.😇😕

🐓சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம்.😳

🐓தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.

🐓மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.😯

🐓மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் .😟

🐓ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது .... அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர் களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்து கொள்கின்றனர்.


Thursday, 2 February 2017

Padma Shri Raamaiya and his one crore trees

மனநிலை பாதிக்கப்பட்டவர் என கிண்டல்: 'பத்மஸ்ரீ 'வென்று பதிலடி தந்த முதியவர்!

மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று மக்களால் கிண்டல் செய்யப்பட்டவர் 'பத்மஸ்ரீ' விருதை வென்று அசத்த, இப்போது அவரைக் கிண்டலடித்தவர்கள் மரியாதை நிறைந்த கண்களுடன் உற்று நோக்குகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரெட்டிப்பள்ளி என்ற கிராமத்தில் வசிப்பவர் தாரிப்பள்ளி ராமையா (வயது 70). காலையில் எழுந்ததும் சைக்கிளை எடுத்துக் கொள்வார் ராமையா. சைக்கிள் முழுவதும் விதைகளும், மரக்கன்றுகளும் நிறைந்து காணப்படும். சைக்கிள் போய்கொண்டே இருக்கும். மரங்கள் இல்லாத தரிசு நிலத்தைக் கண்டால் மட்டுமே சைக்கிள் நின்று விடும்.

பின்னர் ராமையா அங்கே சில நாட்கள் முகாமிடுவார். கிராமத்தை, தனது மனைவியைக் கூட மறந்து விடுவார். கையோடு கொண்டு வந்த, மரக்கன்றுகளை குழி தோண்டி நடுவார். பல கிலோ மீட்டர் தொலைவு சைக்கிளிலேயே சென்று அந்த மரக்கன்றுகளுக்காக தண்ணீர் கொண்டு வருவார். அந்த மரக்கன்றுகள் தானாக வளரத் தொடங்கிய பின்னரே அந்த இடத்தை விட்டு ராமையா நகர்வார்.

இப்படி தெலுங்கானா மாநிலம் முழுவதும் சுமார் ஒரு கோடி மரங்களை நட்டு சாதனை படைத்துள்ளார் ராமையா. அதாவது தெலுங்கானாவில் மூன்றில் ஒருவருக்காக ராமையா மரக்கன்றுகளை நட்டுள்ளார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பல நாட்கள் தனது வீட்டுக்கும் கிராமத்துக்கும் போகாமல் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் ராமையாவுக்கு, அந்த கிராம மக்கள் வைத்த பெயர் என்ன தெரியுமா...' மனநிலை பாதிக்கப்பட்டவர்'.

சதா... மரமும் மரக்கன்றுகளுடனும் திரிந்ததால், கிராம மக்கள் ராமையாவை இப்படித்தான் கருதினர். எப்போதாவது விருதுகள் அதற்கு தகுதியானவர்களைத் தேடி வரும்.  இந்த ஆண்டு பத்ம விருதுகளுக்குரியவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட போது, அதில் தாரிப்பள்ளி ராமையாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இப்போது கிராம மக்கள் ராமையாவை மரியாதை நிறைந்த கண்களுடன் உற்று நோக்குகின்றனர். தன்னலம் கருதாமல் மரக்கன்றுகள் நட்டதற்காக இப்போது ராமையாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

ரெட்டிப்பள்ளியில் ஒரு சிறிய வீட்டில்தான் ராமையா வசிக்கின்றார். வீடு முழுவதும் மரக்கன்றுகள் ஆங்காங்கே இறைந்து கிடக்கின்றன. சுற்றுச்சூழலை காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் பேனர்கள் சுற்றி காணப்படுகிறது. அவரது சைக்கிளும் கூட மரங்கள் நடுவதன் அவசியத்தை வலியுறுத்தும் பதாகைகளைத் தாங்கிக் கொண்டுதான் அவருடன்  பயணிக்கிறது. ராமையா, சைக்கிளில் பயணிக்கும் போது, இவரது கழுத்தைச் சுற்றி, ஸ்கார்ப் போல பேனர் சுற்றப்பட்டிருக்கும். அதில், 'மரக்கன்றுகளை காப்பாற்றுங்கள்.. உங்களை அது காப்பாற்றும்' என்றும் எழுதப்பட்டிருக்கும். திருமண வீடு, புதுமனை புது விழா என எந்த விழா நடந்தாலும் ராமையா சார்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்படுவதும் வழக்கமாக இருக்கும்.

தெலுங்கானா மாநிலத்தையே பசுமையாக மாற்றிக் கொண்டிருக்கும் ராமையா படித்ததோ 10ம் வகுப்பு வரைதான். ஆனாலும் சுற்றுச்சூழல் குறித்து பத்திரிகைகளில் எந்த கட்டுரை வந்தாலும் அதனை சேகரிப்பதும் ராமையாவின் வழக்கம். விருது வென்றது குறித்து ராமையா இவ்வாறு கூறுகிறார்,'' பத்மஸ்ரீ விருது வென்றிருப்பது எனது பொறுப்பை இன்னும் அதிகரித்திருக்கிறது. இவருக்கு விருதா...? என்று இப்போது பலரும் புருவத்தை உயர்த்துகின்றனர். அப்படியாவது மரக்கன்றுகள் நடுவதன் அவசியத்தை மக்கள் உணர்ந்து கொண்டால் நல்லதுதான். என்னைப் பார்த்தாவது மரக்கன்றுகளை நடத் தொடங்குவார்கள். என்னைப் பொறுத்த வரை பூமியில் மரங்கள் இல்லாத பகுதியே இருக்கக் கூடாது. ஒவ்வொரு மரமும் பூமியை காப்பாற்றுவதற்கான அச்சாரம்.. நான் வைத்த, எந்த மரக்கன்றுகளும் வளராமல் போனதில்லை. அப்படி மரக்கன்றுகள் வளராமல் போனால், நான் எனது வாழ்க்கையை இழந்ததற்கு சமம்'' என்கிறார்.

Respect woment and Stop harassing

*💠பெண் என்பவள் வெறும் சதையா..???💠*

🔸பெண் புடவை கட்டினாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
🔸அவள் சுடிதார் உடுத்தினாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
🔸அவள் பர்தா போட்டாலும் கற்பழிக்கப்படுகிறாள்.

👉 _பெண்ணின் உடையிலும் பிரச்சனை இல்லை.....!_

🔹பெண் ஏழு வயதிலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் பதினேழு வயதிலும் கற்ப்பழிக்கபடுகிறாள்,
🔹அவள் எழுபது வயதிலும் கற்பழிக்கப்படுகிறாள்.

👉 _பெண்ணின் வயதிலும் பிரச்சனை இல்லை.....!_

🔸பெண் இந்துவாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் முஸ்லீமாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் கிறிஸ்தவராக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,

👉 _பெண்ணின் மதத்திலும் பிரச்சனை இல்லை.....!_

🔹பெண் தாயாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் மனைவியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் சகோதரியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்.

👉 _பெண்ணின் உறவிலும் பிரச்சனை இல்லை.....!_

🔸பெண் தமிழச்சியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் வடமொழி பேசினாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் ஆங்கிலம் பேசினாலும் கற்பழிக்கப்படுகிறாள்.

👉 _பெண்ணின் மொழியிலும் பிரச்சனை இல்லை.....!_

🔹பெண் கருப்பாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் வெள்ளை மயிலாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் கொள்ளை அழகாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்.

👉 _பெண்ணின் நிறத்திலும் பிரச்சனை இல்லை.....!_

*அப்போ எங்கு தான் பிரச்சனை..???*

சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் இல்லையேல் நாம் திருந்த வேண்டும்.....!

சமூகத்தின் மீதும் பெண்கள் மீதும் ஏன் பழிப்போட வேண்டும்..???

ஆண்களுக்கு பெண்களை விட வலிமையை தந்து இருப்பது அவளை காக்கவே தவிர பறிக்க அல்ல.....!

பெண்களை தாயாக சகோதரியாக பார்க்காவிட்டாலும் அவர்களை காமமாக பார்க்காதீர்கள்.....!

இந்த எழுத்துக்கள் கண்ணீர் சிந்தும் என் கண்மணிகளான சகோதரிகளுக்கு சமர்பணம்..!!!_

*சிந்தியுங்கள்... செயல்படுங்கள்...*

*படியுங்கள்...  பகிருங்கள்...*

Tuesday, 31 January 2017

மறை நீர்-(virtual water)


பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்?

மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.

ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், “கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது'' என்கிறார் ஆலன்.

புத்திசாலி நாடுகள்!

நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.

இது இந்திய நிலவரம்!

முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.

மூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர்

வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்?முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.

சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.

அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.

ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.

பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.

தண்ணீருக்கு எங்கு கணக்கு?

ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.

இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்.

மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும்.

என்றும் சமூக உணர்வுடன்

Monday, 30 January 2017

பலநாட்டு முதலீடும் -விவசாய அழிவும் (India Economic)

இந்தியப் பொருளாதாரம் – எங்கே முடியும்?

சுதந்திர இந்தியா வளரும் வேலையில் உலகில் இரண்டு நாடுகள் வல்லாதிக்கம் செலுத்தி உலக நாடுகளை இரண்டாகப் பிரித்தது. அதில் ஒன்று, ஐக்கிய அமெரிக்கா (முதாலிளித்துவத்தை முன் வைத்து உருவானது), இன்னொன்று சோவியத் ரஷ்யா (தொழிலாளித்துவத்தை முன் வைத்து உருவானது)

எனினும், உலக நாடுகள் இரண்டாகப் பிரிய இந்தியா மட்டும் புது பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்தியது. அது தான், முதலாளித்துவமும் - சமத்துவமும் இணைந்து செயல்படும் கலப்புப் பொருளாதாரம் ஆனது.

அந்த மூன்றாவது அணிக்கு இந்தியாவே தலைமை தாங்கியது.

அவ்வாறு கலப்பு பொருளாதாரத்தை கடைபிடிக்க என்ன காரணம் என்றால்....

ஏனைய உலக நாடுகள் ஒரு மொழி, ஒரு மதம் என்று ஒன்றினைய கூடியது, இந்தியாவில் அது சாத்தியமே இல்லை, 2 ஆயிரம் மொழி, 3000 சாதீகள் 200 க்கும் மேற்பட்ட மத நம்பிக்கைகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு சூழலை கொண்டது, முதலாளித்துவமே இருந்தாள்,

சாதி மதத்தில் பின் தங்கி இருக்கும் மக்கள் மேலும் அடிமை படுத்தப்படுவார்கள், பல அவதிகளுக்கு உள்ளாவார்கள்,

அதே தொழிலாளித்துவம் என்றால் இந்தியாவில் நில உடைமையாளர்களை நம்பியே விவசாயம் என்ற நிலையில் அது முடங்கும். எனவே இந்தியாவிற்கு இரண்டும் வேண்டும் என்று முடிவு செய்து கலப்புப் பொருளாதாரமாக ஒன்றாக இணைந்தது இந்தியா.

நேருக்கு பின் லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக நியமிக்கப்பட்டு இரண்டு வருடத்தில் இறக்க, அவருக்கு பின் இந்திரா காந்தி பிரதமராக தந்தை கொண்ட தலையிடா கொள்கையை உடைத்து தனிக் கொள்கையை வகுத்தார். ஆரம்பத்தில் அமெரிக்காவுடன் கூட்டு வைத்தார். பல நாட்டு முதலீடுகளை ஈர்க்க மானாடு நடத்தினார். அப்பொழுது இந்திராவை இயக்கிய அன்றைய காங்கிரஸ் தலைவர் கர்ம வீரர் எச்சரித்தார். இந்தியா விவசாயத்தை மட்டுமே நம்பிய மிகப் பெரும் நாடு, மற்ற நாடுகள் எந்தப் பக்கம் இழப்பானாலும் பல வழிகளில் அதை ஈடு கட்டும். இந்தியப் பொருளாதாரம் விவசாயத்தை நம்பி உள்ளது. எனவே இந்தியா, தொழில் துறைக்கு இரண்டாம் இடம் கொடுத்தாலே போதுமானது என்று கூறினார். கர்ம வீரர் கூறியதை இந்திரா கேட்கவில்லை. அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டால் அதிக அளவு கடன் கொடுப்பான் என்று நம்பினார். அமெரிக்காவும் கடன் கொடுக்க முன் வந்தது. ஆனால், மொத்தமாகக் கொடுக்கவில்லை. பிசிரு பிசிராகக் கொடுத்தது. வியட்நாம் போர் ஏற்படவும் இந்தியாவை பகடை காயாக அமெரிக்கா பயன்படுத்தியது இந்திராவுக்கு தெரிய வந்தது. 4 ஆண்டுகளுக்கு முன் இந்தியா சீனாவிடம் போரில் மரண அடி வாங்கியது. இந்திரா காந்தியும் பிரதமராகி இரண்டே வருடம் ஆன நிலை நேக்காக அமெரிக்காவை கழட்டி விட்டு ரஷ்யாவுடன் கூட்டணி அமைத்தார், பின்னே இந்திராவின் அசுர வளர்ச்சி அமெரிக்காவை அல்லோல பட வைத்தது. அமெரிக்கா பாக்கிஸ்தானுடன் இணைந்து செயல்பட்டு இந்தியாவிற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளிலும் இறங்கியது. விடுவாரா இந்திரா காந்தி! பாகிஸ்தானை இரண்டாக பிரித்து சிதறடித்தார்.

இந்திராவுக்கு பின் வந்த ராஜீவ் காந்தி தெற்க்காசிய கூட்டமைப்பபை ஏற்படுத்தினார். இருந்தாலும் தொழில் மோகம் முதலீடுகளை ஈர்க்கும் மோகம் குறைந்த பாடில்லை, அவரை தொடர்ந்து வி.பி.சிங், ஐ.கே. குஜ்ரால், நரசிம்ம ராவ், தேவ கவுடா, வாஜ் பேயி, மன்மோகன் சிங், மோடி உட்பட வெளி நாட்டு முதலீடுகளை ஈர்க்க பலர் முனைந்தனர். அதற்கு அவர்கள் கொடுத்த விலை இந்தியாவின் முதுகெழும்பான விவசாய நிலம், சுதந்திர இந்தியாவில் 35 கோடி பேருக்கு 80% விவசாய நிலமாக இருந்த இந்தியா. 2015 ல் 120 கோடி பேருக்கு 35% முதல் 45% வரையாகக் குறைந்தது.

இந்த நிலை தொடர்ந்தால்... இப்படியே சென்றால்.... எங்கே செல்லும் இந்தியா? இன்னும் பத்து இருபது வருடத்தில் எல்லாம் இறக்குமதி தான்.

சரி, இறக்குமதியான பொருளை வாங்க வாங்கும் திறன் இருக்குமா என்றால்?

அரபு வளைகுடா நாடுகள் விவசாயமற்றது. எண்ணெய்களை விற்று இறக்குமதி செய்கிறது. சரி, இந்தியாவில் விவசாயமே மூலாதராம். விவசாயத்தை அழித்து விட்டு வேறு நாட்டிடம் இருந்து விளை பொருட்களை விலைக்கு வாங்கினால் எதை வைத்து வாங்குவீர்?

தொழில் தொடங்குவோம் என்றால் எத்தனை பேர் எத்தனை தொழில் தொடங்குவீர்? வாங்க ஆள் வேண்டாமா? வாங்கும் சக்தி வேண்டாமா?

எங்கே போய் முடியப்போகிறது இந்தியப் பொருளாதாரம். 

FARMERS SUICIDE IN INDIA

                   FARMERS SUICIDE IN INDIA 

India is an agrarian country.  Agriculture is the backbone of India. Yet the farmers who are the main producers of food are being pushed to a situation that leads them to commit suicide.  Farmers lack education and the only job they know is farming. Their gods are the land where they cultivate and the cattle that help them. But these two are now being targeted and diminished. According to the recent surveys farmers suicide are decreasing. They say so..  But what is the truth?  Still farmers are the ones affected by the greedy businessmen and greedy middlemen. Their death tolls are still on the rise.. But the truth is hidden from the society.  People will pay no attention to the tortures faced by farmers since there is still availability of food in the nation.  But the slow disappearance of farmers from our country will not only effect our food supply but also economy will be effected. More and more food products will be imported than exported. It will effect the nation economically. We will be indebted to other countries and the condition will persist to be. Farmer suicide is not an issue faced by only a few states of our country..  But it's a problem of our nation as a whole.


Agriculture is an unorganized sector. It doesn't have an systematic institutional or organizational planning for cultivation, irrigation, harvesting etc. The plans by the government doesn't reach the marginal farmers. The ground reality is that the farmers nowadays have very small land (at most 2 hectares)of their own for cultivation. Cultivation in such small areas is not economically feasible. Thus the farmers become vulnerable. Sometimes they have to pay part of their earnings to their landlords. Another problem faced by the farmers are the money grabbing middlemen. The agricultarists do not get the deserved selling value for their crops due to the middlemen and greedy businessmen. To abolish this problem the government should promote the plan called "ULAVAR SANTHAI"(FARMERS MARKET ), where the farmers can directly sell their products at reasonable price. Also we can help the farmers by buying vegetables from them without bargaining. We do not bargain at malls and supermarkets!! Those big businessmen earn easily by doing nothing and the poor farmers give away their lives due to lack of money even after toiling hard for months. The schemes by the government do not reach the small farmers.  On the contrary, big landlords are benefitted by such schemes. One of the worst problems faced by the present day agricultarists is real estate mafia! Even the fertile lands best suited for agriculture are being sold to the real estate where they are being divided as plots and sold at high prices.  Strict measures against land grabbing must be implemented. The main reason for farmer suicide is indebtness and debt burden. The high interest rates by the loan lending people and the exorbitant rates at which the farmers are forced to return the money and the lack of income causes the poor farmers to take their own lives. Some farmers commit suicide along with their family.
 Exorbitant interest rates should be declared illegal and the people disobeying need to be punished by law. Strict measures need to be undertaken for the greedy moneylenders. As the youth of the nation, we must raise our support for agriculture. Agriculture is the backbone of India and we, the youngsters are the pillars of our nation.  Farming is not something to be ashamed of.  It is something everyone must praise. Food is a necessity for life and so are the producers I.e. our farmers.  The state and central government are taking steps to help the farmers. But we must help those schemes reach them. As educated individuals we must make it our duty to educate the farmers so that they can know about the schemes provided by the government. And about the advanced methods of farming. Crop rotation, rain water harvesting, etc. can help the farmers if they get the awareness about them. Like industrial sectors there should also be agricultural  zones where only agriculture related activities will be allowed.  Shortage of water and managent of water is another problem. Better methods of irrigation should be developed. Participation of youth in agriculture is economically possible. It can be attained by introduction of new technologies. We must create awareness about alternative methods of income to the farmers. Like skills other than farming can be taught to them. And animal husbandry or fisheries, timber production etc.

This is the time for change. Let the change begin with the factor that has always made our nation stand strong. No one else is going to be part of the change unless you are!  Every little action creates a difference. Let this be a more humanitarian approach than an economic one. Let's not forget that we are a net agricultural food producing country.  As agricultarists we must be united. We must avoid the corporate lobbies hidden business tricks and help farmers. The government should facilitate farming by giving good options to the farmers. The governing body must know that without us they cannot work. We must know..  Our next generation must know that 'it is a pride to be a farmer'. The struggle of the farmers is the struggle of each one of us.. Our families.. Now is the time to be united. Forget the differences and fight for our family.. Our farmers.. Our nation.!
                           "Stop farmer suicide" 
                         "SAVE OUR FARMERS"
                                   Jai Hind!