Saturday, 11 February 2017

Youth Role in INDIA'S Development


ROLE OF YOUTH

THE YOUTH of today is the driving force of tomorrow. It has some responsibility towards its country, which it must acknowledge and practice. Instead of blaming the system, youth should come together and mould the nation for a better tomorrow.

Youth have some responsibility towards their country. We need to learn from yesterday and live with hope for a better tomorrow. We can learn from our past how the young warriors shed their blood for the country.
We all have some responsibility towards our country, which we must understand and practice. Youth and nation have to walk hand in hand. Most importantly, the youth should be honest and hard working.

Youth should stand against all the wrong doings in the country. Instead of blaming the system, young India should come together and with their toil should mould our nation for a better tomorrow. We, the youth should use our brains, strength, creativity and imagination to serve our nation. Instead of asking, "Who’s going to fight the corruption?" we should do it ourselves. Rather than fighting upon the issues and ruining the country, we should learn to develop it.
 So we have to do our bit for the nation and be the change that we have always wanted.
The role of youth is of most importance in today’s time. It has underplayed itself in field of politics. It should become aspiring entrepreneur rather than mere workers. It can play a vital role in elimination of terrorism. Young participation is important because youth are the country’s power. Youth recognise problems and can solve them. Youth are strong forces in social movements. They educate children about their rights. They help other young people attain a higher level of Intellectual ability and to become qualified adults.
‘Youth is like a fire
It crept forward.
A Spark at first
Growing into a flame
The brightening into a Blaze’

“IT’S OUR TIME TO CHANGE EVERYTHING
WE MUST DEVELOP OUR INDIA

GET UP YOUNGSTERS

Friday, 3 February 2017

Dangerous Broiler chicken-பிராய்லர் கோழி


மதுவை விட பாதிப்பு❓
                    🐓 பிராய்லர்  கோழி🐓
40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி🐓 வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.
பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

🐓ஆண்களின்  உயிரணுக்களை அழிக்கிறது.😯
ஆண்மையை அழிக்கும் பிராய்லர்

🐓குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.😯

🐓"பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்".😯

🐓டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள்.😯

"இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது".😴😴

🐓பிராய்லர் கோழி சதையு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.😟

🐓கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.😇

🐓100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.😇😕

🐓சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம்.😳

🐓தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.

🐓மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.😯

🐓மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் .😟

🐓ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது .... அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர் களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்து கொள்கின்றனர்.


Thursday, 2 February 2017

Padma Shri Raamaiya and his one crore trees

மனநிலை பாதிக்கப்பட்டவர் என கிண்டல்: 'பத்மஸ்ரீ 'வென்று பதிலடி தந்த முதியவர்!

மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று மக்களால் கிண்டல் செய்யப்பட்டவர் 'பத்மஸ்ரீ' விருதை வென்று அசத்த, இப்போது அவரைக் கிண்டலடித்தவர்கள் மரியாதை நிறைந்த கண்களுடன் உற்று நோக்குகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரெட்டிப்பள்ளி என்ற கிராமத்தில் வசிப்பவர் தாரிப்பள்ளி ராமையா (வயது 70). காலையில் எழுந்ததும் சைக்கிளை எடுத்துக் கொள்வார் ராமையா. சைக்கிள் முழுவதும் விதைகளும், மரக்கன்றுகளும் நிறைந்து காணப்படும். சைக்கிள் போய்கொண்டே இருக்கும். மரங்கள் இல்லாத தரிசு நிலத்தைக் கண்டால் மட்டுமே சைக்கிள் நின்று விடும்.

பின்னர் ராமையா அங்கே சில நாட்கள் முகாமிடுவார். கிராமத்தை, தனது மனைவியைக் கூட மறந்து விடுவார். கையோடு கொண்டு வந்த, மரக்கன்றுகளை குழி தோண்டி நடுவார். பல கிலோ மீட்டர் தொலைவு சைக்கிளிலேயே சென்று அந்த மரக்கன்றுகளுக்காக தண்ணீர் கொண்டு வருவார். அந்த மரக்கன்றுகள் தானாக வளரத் தொடங்கிய பின்னரே அந்த இடத்தை விட்டு ராமையா நகர்வார்.

இப்படி தெலுங்கானா மாநிலம் முழுவதும் சுமார் ஒரு கோடி மரங்களை நட்டு சாதனை படைத்துள்ளார் ராமையா. அதாவது தெலுங்கானாவில் மூன்றில் ஒருவருக்காக ராமையா மரக்கன்றுகளை நட்டுள்ளார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பல நாட்கள் தனது வீட்டுக்கும் கிராமத்துக்கும் போகாமல் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் ராமையாவுக்கு, அந்த கிராம மக்கள் வைத்த பெயர் என்ன தெரியுமா...' மனநிலை பாதிக்கப்பட்டவர்'.

சதா... மரமும் மரக்கன்றுகளுடனும் திரிந்ததால், கிராம மக்கள் ராமையாவை இப்படித்தான் கருதினர். எப்போதாவது விருதுகள் அதற்கு தகுதியானவர்களைத் தேடி வரும்.  இந்த ஆண்டு பத்ம விருதுகளுக்குரியவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட போது, அதில் தாரிப்பள்ளி ராமையாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இப்போது கிராம மக்கள் ராமையாவை மரியாதை நிறைந்த கண்களுடன் உற்று நோக்குகின்றனர். தன்னலம் கருதாமல் மரக்கன்றுகள் நட்டதற்காக இப்போது ராமையாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

ரெட்டிப்பள்ளியில் ஒரு சிறிய வீட்டில்தான் ராமையா வசிக்கின்றார். வீடு முழுவதும் மரக்கன்றுகள் ஆங்காங்கே இறைந்து கிடக்கின்றன. சுற்றுச்சூழலை காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் பேனர்கள் சுற்றி காணப்படுகிறது. அவரது சைக்கிளும் கூட மரங்கள் நடுவதன் அவசியத்தை வலியுறுத்தும் பதாகைகளைத் தாங்கிக் கொண்டுதான் அவருடன்  பயணிக்கிறது. ராமையா, சைக்கிளில் பயணிக்கும் போது, இவரது கழுத்தைச் சுற்றி, ஸ்கார்ப் போல பேனர் சுற்றப்பட்டிருக்கும். அதில், 'மரக்கன்றுகளை காப்பாற்றுங்கள்.. உங்களை அது காப்பாற்றும்' என்றும் எழுதப்பட்டிருக்கும். திருமண வீடு, புதுமனை புது விழா என எந்த விழா நடந்தாலும் ராமையா சார்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்படுவதும் வழக்கமாக இருக்கும்.

தெலுங்கானா மாநிலத்தையே பசுமையாக மாற்றிக் கொண்டிருக்கும் ராமையா படித்ததோ 10ம் வகுப்பு வரைதான். ஆனாலும் சுற்றுச்சூழல் குறித்து பத்திரிகைகளில் எந்த கட்டுரை வந்தாலும் அதனை சேகரிப்பதும் ராமையாவின் வழக்கம். விருது வென்றது குறித்து ராமையா இவ்வாறு கூறுகிறார்,'' பத்மஸ்ரீ விருது வென்றிருப்பது எனது பொறுப்பை இன்னும் அதிகரித்திருக்கிறது. இவருக்கு விருதா...? என்று இப்போது பலரும் புருவத்தை உயர்த்துகின்றனர். அப்படியாவது மரக்கன்றுகள் நடுவதன் அவசியத்தை மக்கள் உணர்ந்து கொண்டால் நல்லதுதான். என்னைப் பார்த்தாவது மரக்கன்றுகளை நடத் தொடங்குவார்கள். என்னைப் பொறுத்த வரை பூமியில் மரங்கள் இல்லாத பகுதியே இருக்கக் கூடாது. ஒவ்வொரு மரமும் பூமியை காப்பாற்றுவதற்கான அச்சாரம்.. நான் வைத்த, எந்த மரக்கன்றுகளும் வளராமல் போனதில்லை. அப்படி மரக்கன்றுகள் வளராமல் போனால், நான் எனது வாழ்க்கையை இழந்ததற்கு சமம்'' என்கிறார்.

Respect woment and Stop harassing

*💠பெண் என்பவள் வெறும் சதையா..???💠*

🔸பெண் புடவை கட்டினாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
🔸அவள் சுடிதார் உடுத்தினாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
🔸அவள் பர்தா போட்டாலும் கற்பழிக்கப்படுகிறாள்.

👉 _பெண்ணின் உடையிலும் பிரச்சனை இல்லை.....!_

🔹பெண் ஏழு வயதிலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் பதினேழு வயதிலும் கற்ப்பழிக்கபடுகிறாள்,
🔹அவள் எழுபது வயதிலும் கற்பழிக்கப்படுகிறாள்.

👉 _பெண்ணின் வயதிலும் பிரச்சனை இல்லை.....!_

🔸பெண் இந்துவாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் முஸ்லீமாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் கிறிஸ்தவராக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,

👉 _பெண்ணின் மதத்திலும் பிரச்சனை இல்லை.....!_

🔹பெண் தாயாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் மனைவியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் சகோதரியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்.

👉 _பெண்ணின் உறவிலும் பிரச்சனை இல்லை.....!_

🔸பெண் தமிழச்சியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் வடமொழி பேசினாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் ஆங்கிலம் பேசினாலும் கற்பழிக்கப்படுகிறாள்.

👉 _பெண்ணின் மொழியிலும் பிரச்சனை இல்லை.....!_

🔹பெண் கருப்பாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் வெள்ளை மயிலாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் கொள்ளை அழகாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்.

👉 _பெண்ணின் நிறத்திலும் பிரச்சனை இல்லை.....!_

*அப்போ எங்கு தான் பிரச்சனை..???*

சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் இல்லையேல் நாம் திருந்த வேண்டும்.....!

சமூகத்தின் மீதும் பெண்கள் மீதும் ஏன் பழிப்போட வேண்டும்..???

ஆண்களுக்கு பெண்களை விட வலிமையை தந்து இருப்பது அவளை காக்கவே தவிர பறிக்க அல்ல.....!

பெண்களை தாயாக சகோதரியாக பார்க்காவிட்டாலும் அவர்களை காமமாக பார்க்காதீர்கள்.....!

இந்த எழுத்துக்கள் கண்ணீர் சிந்தும் என் கண்மணிகளான சகோதரிகளுக்கு சமர்பணம்..!!!_

*சிந்தியுங்கள்... செயல்படுங்கள்...*

*படியுங்கள்...  பகிருங்கள்...*